/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மூதாட்டியிடம் 5 சவரன் பறிப்பு
/
மூதாட்டியிடம் 5 சவரன் பறிப்பு
ADDED : நவ 14, 2025 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கனகம்மாசத்திரம்: மூதாட்டி அணிந்திருந்த 5 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
பூண்டி ஒன்றியம் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோசம்மாள், 70. இவர், நேற்று முன்தினம் மதியம், வீட்டின் முன் அமர்ந்திருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர் விலாசம் கேட்டுள்ளனர்.
ஒருவர் மட்டும் இறங்கி வந்து மூதாட்டியிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின், திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்து கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

