/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டியில் வினாடிக்கு 50 கனஅடி நீர் திறப்பு
/
பூண்டியில் வினாடிக்கு 50 கனஅடி நீர் திறப்பு
ADDED : ஜன 08, 2024 06:26 AM
ஊத்துக்கோட்டை: சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தற்போது முழுதும் நிரம்பி கடல் போல் காட்சிஅளிக்கிறது.
வடகிழக்குப் பருவமழை, கிருஷ்ணா நீர் வரத்து மற்றும், 'மிக்ஜாம்'புயலால் பெய்த பலத்த மழையால் நீர்த்தேக்கம் முழுதும் நிரம்பி உள்ளது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான, 3.2 டி.எம்.சி., நீரில், 3.064 டி.எம்.சி., உள்ளது. மொத்த நீர்மட்டமான, 35 அடியில், 34.75 அடி நீர் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் குறைந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நேற்று காலை பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்தால் நீர்வரத்து அதிகரிக்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே தண்ணீர் நிரம்பி காணப்படும் நீர்த்தேக்கத்தால் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
எனவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை 5:30 மணிக்கு அங்குள்ள, 16 மதகுகளில், 12வது மதகு திறக்கப்பட்டு அதன் வாயிலாக, வினாடிக்கு, 50 கன அடி நீர் திறக்கப்பட்டது.