/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
500 கிலோ குட்கா பூந்தமல்லியில் பறிமுதல்
/
500 கிலோ குட்கா பூந்தமல்லியில் பறிமுதல்
ADDED : பிப் 04, 2025 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி:சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பூந்தமல்லி டிரங்க் சாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நிற்காமல் சென்ற 'மகேந்திரா' காரை, போலீசார் ஒரு கி.மீ., துாரம் காரில் துரத்தி சென்றனர்.
பின், காரை சுற்றி வளைத்து சோதனை செய்தபோது, அதில் 500 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ், 32, ராவத், 37, ஆகிய இருவரையும், போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் இருவரும், ஆந்திராவில் இருந்து குட்கா புகையிலை பொருட்களை வாங்கி, அதை சொகுசு காரில் எடுத்து வந்து, சென்னையில் விற்பனை செய்தது தெரிய வந்தது.