ADDED : அக் 21, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை: பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கத்தினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
த.வெ.க., அரசு தனது தேர்தல் அறிக்கையில், விவசாயிகளின் பயிர்க்கடன் முழுதும் தள்ளுபடிசெய்யப்படும் என, அறிவித்தது. இதை நடைமுறை படுத்தகோரி விவசாய சங்கத்தினர் இன்று வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட விஷ்ணுவாக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்த பாதித்தது. இதேபோல், பெரியபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட தண்டலம் பகுதியிலும் விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெங்கல்,பெரியபாளையம் போலீசார். மறியலில் படுபட்ட, 55 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
