/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் 7,866 விவசாயிகளிடம் 58.32 கோடி கிலோ நெல் கொள்முதல்
/
திருவள்ளூரில் 7,866 விவசாயிகளிடம் 58.32 கோடி கிலோ நெல் கொள்முதல்
திருவள்ளூரில் 7,866 விவசாயிகளிடம் 58.32 கோடி கிலோ நெல் கொள்முதல்
திருவள்ளூரில் 7,866 விவசாயிகளிடம் 58.32 கோடி கிலோ நெல் கொள்முதல்
ADDED : அக் 27, 2025 11:17 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 7,866 விவசாயிகளிடம் இருந்து 58.32 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவத்தில், 65,325 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், 69 நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. 100 கிலோ நெல் மூடை, சன்ன ரகம் - 2,545, பொது ரகம் 2,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை, 69 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், 7,866 விவசாயிகளிடமிருந்து, 58.32 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2,726 விவசாயிகளிடமிருந்து, 1.50 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
கொள்முதல் செய்யப்பட்ட 1.96 கோடி கிலோ நெல், கிடங்குகளிலும், 2.59 கோடி கிலோ, அரவை ஆலைகளிலும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், 43.87 லட்சம் கிலோ நெல் இருப்பில் உள்ளது.
இதுவரை 7,866 விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 145.89 கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

