UPDATED : ஆக 31, 2026 07:31 PM
ADDED : ஆக 31, 2026 06:31 PM
மப்பேடு: மப்பேடு அருகே 6.3 கிலோ குட்கா என்னும் போதைப்பாக்குகளை பறிமுதல் செய்த போலீசார் மூதாட்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மப்பேடு அடுத்த மேட்டுச்சேரி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மப்பேடு போலீசார் நேற்று முன்தினம் மாலை மப்பேடு அடுத்த மேட்டுச்சேரி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது காஞ்சனா, 61 என்பவரது கடையில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு 600 கிராம் ஹான்ஸ், 4.6 கிலோ விமல், 1.1 கிலோ வி 1, என மொத்தம் 6.3 கிலோ குட்கா என்னும் போதைப்பாக்குகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 10,000 ரூபாய்.
இதுகுறித்து வழக்கு பதிந்த மப்பேடு போலீசார் மூதாட்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
