/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் ரூ.45 கோடியில் 6 பூங்கா, மழைநீர் வடிகால்வாய்
/
திருத்தணியில் ரூ.45 கோடியில் 6 பூங்கா, மழைநீர் வடிகால்வாய்
திருத்தணியில் ரூ.45 கோடியில் 6 பூங்கா, மழைநீர் வடிகால்வாய்
திருத்தணியில் ரூ.45 கோடியில் 6 பூங்கா, மழைநீர் வடிகால்வாய்
ADDED : பிப் 20, 2025 09:48 PM
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 510 தெருக்களில், 14,100 குடும்பத்தினர் வசிக்கின்றனர். நகராட்சியில், 110 கோடி ரூபாயில், திருப்பாற்கடல் கூட்டுக்குடிநீர் அபிவிருத்தி பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கூட்டுக் குடிநீர் குழாய் புதைக்கவும், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தருவதற்கும் சாலை மற்றும் தெருக்களில் தோண்டி குழாய் அமைக்கப்பட்டுள்ளன.  இதனால்,சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து காயங்களுடன் சிரமப்பட்டு வந்தனர்.
மேலும், மழைநீர் வடிகால்வாய் பல பகுதிகளில் அமைக்காமல் உள்ளன. சில இடங்களில் கால்வாய்கள் புதைந்துள்ளன. இதனால் மழைநீர் செல்வதற்கு முடியாமல் சாலை மற்றும் தெருக்களில் தேங்கி நின்றன.
இது குறித்து திருத்தணி நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நகராட்சியில் பழுதடைந்த சாலைகள், மழைநீர் வடிகால்வாய், கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் விரிவுப்படுத்தல், புதிய தெரு விளக்குகள் பொருத்தல், புதியதாக, மங்கலகீழார், திவான் பகதுார், ரெட்டிக்குளம், தட்டான்குளம் மற்றும் சப்பானி குளம் ஆகியவை சீரமைத்து, பொழுது போக்கிற்கும், நடைபயிற்சி வசதியுடன் நவீன பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.
திடக்கழிவு மேலாண்மைக்காக, 12 எல்.சி.வி., வாகனங்கள் வாங்கவும் திட்டமிட்டுள்ளன. நகராட்சியில் மேற்கண்ட வளர்ச்சி பணிகளுக்கு, மொத்தம், 45.56 கோடி ரூபாய் தேவை என திட்டமதிப்பீடு தயாரித்து  கடந்த, 14ம் தேதி சென்னையில் அமைச்சர் நேரு தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் நிதியுதவி வழங்குமாறு கடிதம் வழங்கியுள்ளோம்.  இந்த நிதியுதவி கிடைத்ததும், பணிகளுக்கு டெண்டர் விட்டு, இந்தாண்டிற்குள் பணிகள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

