/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டாஸ்மாக் கடையை துளையிட்டு 624 மதுபாட்டில்கள் திருட்டு
/
டாஸ்மாக் கடையை துளையிட்டு 624 மதுபாட்டில்கள் திருட்டு
டாஸ்மாக் கடையை துளையிட்டு 624 மதுபாட்டில்கள் திருட்டு
டாஸ்மாக் கடையை துளையிட்டு 624 மதுபாட்டில்கள் திருட்டு
ADDED : டிச 03, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை : தாமரைப்பாக்கத்தில் டாஸ்மாக் கடை எண்:9,033 இயங்கி வருகிறது. கடந்த, 30ம் தேதி இரவு வழக்கம் போல, டாஸ்மாக் மேற்பார்வையாளர் தேவேந்திரன், 51, கடையை மூடிவிட்டு சென்றார்.
மறுநாள் மதியம் கடையை திறக்க சென்றபோது, கடையின் பக்கவாட்டு சுவரில் மர்ம நபர்கள் ஓட்டை போட்டு, உள்ளே சென்று மதுபாட்டில்களை திருடிச் சென்றனர்.
இதில், 624 மதுபாட்டில்கள் திருடு போனது தெரிந்தது.
இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளர் தேவேந்திரன், வெங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்படி, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.