/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புழல் சிறையில் 7 ஆப்பிள் போன் பறிமுதல்
/
புழல் சிறையில் 7 ஆப்பிள் போன் பறிமுதல்
ADDED : பிப் 05, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்: புழல் சிறையில், விசாரணை கைதிகள் உள்ள மருத்துவமனை பகுதியில், நேற்று முன்தினம் சிறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், வழிப்பறி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற கைதி, உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 25 கிராம் கஞ்சா சிக்கியது.
அவரது விசாரணைக்கு பின், கைதி அப்துல் ஜாபரை பிடித்தபோது, அவரது ஆசனவாயில் மறைத்து வைத்து சிறைக்குள் கஞ்சாவை கடத்தி வந்து, மற்றவர்களுக்கு விற்றது தெரிந்தது. இருவர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர். அதேபோல், இலங்கையைச் சேர்ந்த ஒன்பது கைதிகளிடம் விலை உயர்ந்த, ஏழு 'ஆப்பிள்' போன்கள், இரண்டு ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.