/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல் 6 பெண்கள் உட்பட 7 பேர் காயம்
/
ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல் 6 பெண்கள் உட்பட 7 பேர் காயம்
ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல் 6 பெண்கள் உட்பட 7 பேர் காயம்
ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல் 6 பெண்கள் உட்பட 7 பேர் காயம்
ADDED : பிப் 04, 2025 01:07 AM
கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டையில் இருந்து, ஆறு பயணியருடன், நேற்று காலை, 'டாடா மேஜிக்' ஷேர் ஆட்டோ ஒன்று, கும்மிடிப்பூண்டி சிப்காட் நோக்கி சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. சோழவரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 42, ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.
கவரைப்பேட்டை அடுத்த, பன்பாக்கம் அருகே சென்றபோது, அதே திசையில் ஆந்திரா நோக்கி சென்ற, ஆந்திர மாநில பதிவெண் கொண்ட டேங்கர் லாரி, ஷேர் ஆட்டோ மீது மோதியது.
இதில், ஷேர் ஆட்டோ, சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
ஷேர் ஆட்டோவில் பயணித்த கீழ்முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஜோதி, 47, மேகலா, 32, பொன்னேரியைச் சேர்ந்த பவானி, 31, பிரியங்கா, 30, ஜானகி, 53, தேன்மொழி, 34 மற்றும் டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் காயம் அடைந்தனர்.
டிரைவர் வெங்கடேசன், பயணியர் ஜோதி, பவானி ஆகியோர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மற்றவர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
விபத்து தொடர்பாக கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய, உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, அஜய், 32, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

