/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தென் இந்திய யோகாசன போட்டி 700 போட்டியாளர்கள் பங்கேற்பு
/
தென் இந்திய யோகாசன போட்டி 700 போட்டியாளர்கள் பங்கேற்பு
தென் இந்திய யோகாசன போட்டி 700 போட்டியாளர்கள் பங்கேற்பு
தென் இந்திய யோகாசன போட்டி 700 போட்டியாளர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 13, 2024 06:35 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் வினாஸ்ரீ யோகா மையம் சார்பில், அங்குள்ள தனியார் பள்ளி வளாகத்தில், தென் இந்திய அளவிலான யோகாசன போட்டிகள் நடந்தன.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த, 700, போட்டியாளர்கள் பங்கேற்றனர். மாதவரம் தாசில்தார் நித்யானந்தன் தலைமையில் நடந்த போட்டிகளில், வினாஸ்ரீ யோகா மையத்தின் நிறுவனர் காளத்தீஸ்வரன், பயிற்சியாளர்கள் அர்ச்சனா, வித்யா முன்னிலை வகித்தனர்.
வயது வாரியாக, 10 பிரிவுகளாக, ஆண், பெண் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. அந்தந்த வயது பிரிவில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இறுதியில், ஆண், பெண் என இரு பிரிவுகளாக, சாம்பியன் பட்டத்திற்கான போட்டிகள் நடந்தன. அதில், சென்னை ஆவடி கேந்திர வித்யாலயா பள்ளி மாணவி தமிழினி, 13, பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் இயங்கி வரும் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவன் ஹரிஷ், 11, ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். சாம்பியன் பட்டம் வென்ற இருவருக்கும், கோப்பை, சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.