/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.70,000 மதிப்புள்ள போதை பாக்கு பறிமுதல்
/
ரூ.70,000 மதிப்புள்ள போதை பாக்கு பறிமுதல்
ADDED : ஜன 25, 2024 08:18 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பாக்குள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சீபாஸ்கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் அந்தோணிஸ்டாலின் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது பெரியகுப்பம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த சுந்தர், 43 என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான 210 ஹான்ஸ், 150 கூல் லிப், 180 விமல் பான் மசாலா, 500 எம்.டி.எம்., 600 ஆர்.டி.எம்., 180 வி1 புகையிலை, 500 எம் புகையிலை என மொத்தம் 2,320 பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு 70,000 ரூபாய் ஆகும் என, மணவாளநகர் போலீசார் தெரிவித்தனர். மேலும் அவரிடமிருந்த 2.66 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார் சுந்தரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

