/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் 7.50 லட்சம் கிலோ குப்பை அகற்றம்
/
திருத்தணி முருகன் கோவிலில் 7.50 லட்சம் கிலோ குப்பை அகற்றம்
திருத்தணி முருகன் கோவிலில் 7.50 லட்சம் கிலோ குப்பை அகற்றம்
திருத்தணி முருகன் கோவிலில் 7.50 லட்சம் கிலோ குப்பை அகற்றம்
ADDED : ஆக 18, 2025 11:43 PM

திருத்தணி திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா, கடந்த 14ம் தேதி முதல் துவங்கி நேற்று வரை நடந்தது.
விழாவில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். ஆடிக்கிருத்திகைக்கு வந்த ஏராளமான பக்தர்கள் மலர், மயில் காவடி ஆகியவற்றை அதிகளவில் கொண்டு வந்தனர்.
மலையடிவாரத்தில் உள்ள சரவணபொய்கை, நல்லாங்குளம் ஆகிய இடங்களில் காவடிகளுடன் வந்த பக்தர்கள், குளத்தில் புனித நீராடி, மலர் மாலைகளை கழற்றி விட்டு, புதிய மலர் மாலைகளுடன் காவடிகளுக்கு பூஜை போட்டு மலைக்கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
மேலும், காவடி மண்டபத்தில் நேர்த்திக்கடனை செலுத்திய பின், காவடிகளில் இருந்த மலர் மாலைகளை கழற்றி வீசினர். கோவில் சார்பில் நியமிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் 450 பேரும், திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, பொன்னேரி ஆகிய நகராட்சி ஊழியர்கள் என, மொத்தம் 500 பேர் பூ மாலைகளை அகற்றினர்.
அதேபோல், ஆடிப்பரணி மற்றும் ஆடிக்கிருத்திகை ஆகிய இரு நாட்களில் மட்டும், 300க்கும் மேற்பட்ட இடங்களில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், வாழை இலை, பாக்கு தட்டுகள், பேப்பர் தட்டுகள் என, 1.50 லட்சம் கிலோ குப்பை கழிவு அகற்றப்பட்டது.
அதாவது, 5.50 லட்சம் கிலோ பூமாலை மற்றும் காவடி கூடைகள், 2 லட்சம் கிலோ வாழை இலை, பாக்கு மட்டை போன்ற குப்பை கழிவு என, மொத்தம், 7.50 லட்சம் கிலோ குப்பை, நகராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது.