/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
11 மணி நேரம் கிணற்றில் மிதந்து 7ம் வகுப்பு மாணவன் சாதனை
/
11 மணி நேரம் கிணற்றில் மிதந்து 7ம் வகுப்பு மாணவன் சாதனை
11 மணி நேரம் கிணற்றில் மிதந்து 7ம் வகுப்பு மாணவன் சாதனை
11 மணி நேரம் கிணற்றில் மிதந்து 7ம் வகுப்பு மாணவன் சாதனை
ADDED : மார் 17, 2024 11:12 PM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே சின்னசோழியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார், செல்வி தம்பதி மகன் எஸ்.சிவமணி, 13. பஞ்செட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் சிறு வயது முதல் தந்தையுடன் கிணற்றில் இறங்கி குளிக்கும் போது மிதக்கும் ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து தந்தையின் பாதுகாப்பில், நீண்ட நேர கிணற்றில் மிதக்க பழகினார்.
இந்நிலையில், உலக சாதனை நிகழ்வுக்காக சின்னஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள திறந்தவெளி கிணற்றில், நேற்று காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தொடர்ந்து, 11 மணி நேரம் மிதந்தார்.
இவரது சாதனை, அசிஸ்ட் உலக சாதனை, வேல்ட் புக் ஆப் அச்சீவர்ஸ், இந்தியன் புக் ஆப் அச்சீவர்ஸ், தமிழன் புக் ஆப் அச்சீவர்ஸ் ஆகிய நான்கு உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன.
சிறுவன் சிவமணியை, கும்மிடிப்பூண்டி தி.மு.க.,- எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், தொழிலதிபர் கிளமெண்ட், கைரளி யோகா மைய நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.

