தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 8 மணி நேரம் தொடர் மின்வெட்டு புல்லரம்பாக்கம் மக்கள் சாலை மறியல்

8 மணி நேரம் தொடர் மின்வெட்டு புல்லரம்பாக்கம் மக்கள் சாலை மறியல்

8 மணி நேரம் தொடர் மின்வெட்டு புல்லரம்பாக்கம் மக்கள் சாலை மறியல்


ADDED : செப் 12, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: புல்லரம்பாக்கம் பகுதியில், எட்டு மணி நேர தொடர் மின்வெட்டை கண்டித்து, நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.

திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், இரவு 10:30 மணிக்கு மேலாகியும் மின்சாரம் வரவில்லை.

இதுகுறித்து, பலமுறை மின்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டாலும், முறையான பதில் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இரவு 11:00 மணியளவில், திருவள்ளூர் –- ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த புல்லரம்பாக்கம் போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சு நடத்தினர்.

ஆனால், பொதுமக்கள் சமாதானம் அடையாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். பின், நள்ளிரவு 11:30 மணியளவில் மின் விநியோகம் சீரானதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us