ADDED : நவ 24, 2024 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், நகுன்றத்துார் அருகே மாங்காடு, காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் துரைவேலு, 64. இவரது மனைவி பரிமளம்,57.
இருவரும் நேற்று முன்தினம் இரவு, குன்றத்துாரில் இருந்து மாங்காடிற்கு ஸ்கூட்டரில் திரும்பினர்.
மாங்காடு பேருந்து நிறுத்தம் அருகே கடந்து சென்றபோது, பின்னால்மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், பரிமளத்தின் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தாலிச் செயினை பறித்து, தப்பினார். மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.