/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் இரு வீடுகளில் திருடிய 8 இளைஞர்கள் சிறையில் அடைப்பு
/
திருவள்ளூரில் இரு வீடுகளில் திருடிய 8 இளைஞர்கள் சிறையில் அடைப்பு
திருவள்ளூரில் இரு வீடுகளில் திருடிய 8 இளைஞர்கள் சிறையில் அடைப்பு
திருவள்ளூரில் இரு வீடுகளில் திருடிய 8 இளைஞர்கள் சிறையில் அடைப்பு
ADDED : ஆக 21, 2025 01:48 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் பகுதியில் இரு வீடுகளில் திருடிய எட்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் அடுத்த சேலை பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற சுகாதார அலுவலர் சித்துராஜ், 75. இவர், கடந்த 3ம் தேதி மனைவியுடன், சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார்.
கடந்த 15ம் தேதி காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 75,000 ரூபாய், சிலிண்டர், வெள்ளி மற்றும் பித்தளை என, 22,500 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.
அதேபோல், கடந்த 15ம் தேதி பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த குமார், 47, என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், 30,000 ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஒயர்கள் திருடுபோனது. இதுகுறித்த புகாரின்படி, திருவள்ளூர் போலீசார் விசாரித்து வந்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த செந்தமிழ்செல்வன் என்ற அதிசயம், 20, விஷால், 20, கார்த்திக், 25, பிரபு என்ற அப்பு, 19, ஆகியோர் சித்துராஜ் வீட்டில் திருடியது தெரியவந்தது.
மேலும், அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், 19, கமலக்கண்ணன், 19, சீனிவாசமூர்த்தி, 20, வாஜீத், 19, ஆகியோர் குமார் வீட்டில் திருடியது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து வெள்ளி, பித்தளை பொருட்கள் மற்றும் கேஸ் சிலிண்டரை பறிமுதல் செய்த போலீசார், நேற்று முன்தினம் எட்டு பேரையும் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

