/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.8,000 புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
ரூ.8,000 புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜன 05, 2024 10:14 PM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக மாவட்ட எஸ்.பி., க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சீபாஸ்கல்யாண் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் காலை மப்பேடு காவல் உதவி ஆய்வாள் குணசேகரன் மற்றும் போலீசார் மப்பேடு மேட்டுதாங்கல் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு முனுசாமி, 62 என்பவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1.6 கிலோ ஸ்காவத் குட்கா என்ற புகையிலை போதைப்பாக்குகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் திரவியகுமார், 37 என்பவரது வீட்டில் 8 கிலோ போதைப்பாக்குகளை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து இரு இடங்களில் 9.6 கிலோ போதைப்பாக்குகளை பறிமுதல் செய்த மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து முனுசாமி கடைக்கு 'சீல்' வைத்த மப்பேடு போலீசார் 5,100 ரூபாய் அபராதம் வசூலித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.8,000 ரூபாய் ஆகும். தப்பியோடிய திரவியகுமாரை தேடி வருகின்றனர்.