/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செங்குன்றத்தில் 8.1 செ.மீ., மழை
/
செங்குன்றத்தில் 8.1 செ.மீ., மழை
ADDED : நவ 27, 2024 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி, செங்குன்றத்தில் அதிகபட்சமாக 8.1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் நள்ளிரவு வரை மாவட்டத்தில், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, புழல், பொன்னேரி, ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளமாக தேங்கி உள்ளது. நேற்று, காலை 6:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக செங்குன்றத்தில் 8.1 செ.மீ., மழையும்,. குறைந்த பட்சமாக பூண்டியில் 1 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.