/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சக்கராசனத்தில் சுழன்று 9 வயது சிறுமி சாதனை
/
சக்கராசனத்தில் சுழன்று 9 வயது சிறுமி சாதனை
ADDED : மே 12, 2025 11:19 PM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த நரேஷ்குமார், லட்சுமி தம்பதியின் மகள் இந்துஸ்ரீ, 9. அங்குள்ள தனியார் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையத்தில், யோகாசனம் பயின்று வருகிறார். இவர், சக்கராசனத்தில் கைகளை தரையில் வைத்தபடி உடலை மட்டும், ஒரு நிமிடத்தில், 28 முறை சுழன்று சாதனை படைத்தார்.
இவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் யோகா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், வேல்ட்வயட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன.
சாதனை படைத்த சிறுமி இந்துஸ்ரீ மற்றும் பயிற்சியாளர் சந்தியா ஆகியோரை பள்ளி நிர்வாகமும், சக மாணவர்களும், பகுதிமக்களும் பாராட்டினர்.