/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றவர் மீது வழக்கு
/
நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றவர் மீது வழக்கு
ADDED : அக் 26, 2024 02:55 AM
திருவேற்காடு:திருவேற்காடு அடுத்த பெருமாளகரம், புளூட்டோ தெருவைச் சேர்ந்தவர் மோகன், 53. இவர், கட்டுமான தொழில் செய்து வருகிறார். வீட்டருகே உள்ள தெரு நாய்களுக்கு தினமும் உணவளித்து பாதுகாத்து வருகிறார்.
அதேபோல், எதிர் வீட்டில் வசிக்கும் பாலாஜி, 41, என்பவர், ஒரு வயதுடைய 'பொமேரியன் கிராஸ்' நாய் ஒன்றை வீட்டில் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி, வீட்டை விட்டு வெளியே வந்த 'பொமேரியன்' நாயை, தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, நேற்று முன்தினம் உணவில் விஷம் கலந்து கொடுத்ததில், இரண்டு தெரு நாய்கள் பரிதாபமாக இறந்தன.
இது குறித்த புகாரின்படி, திருவேற்காடு போலீசார், விலங்குகள் பாதுகாப்பு சட்டம் உட்பட இரு பிரிவின் கீழ், பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து, நிலைய ஜாமினில் விடுவித்தனர்.