ADDED : அக் 15, 2024 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரத்தினம் மனைவி சுந்தரம்மாள், 45. இவர் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான பசு மாட்டை அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார்.
அப்போது மாலை, திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இடி, மின்னல் தாக்கி பசு மாடு வயல்வெளியிலேயே இறந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும், திருத்தணி வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மின்னல் தாக்கி இறந்த பசு மாட்டை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட சுந்தரம்மாளுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும் அரசு சார்பில் வழங்கும் நிவாரண நிதியையும் பெற்று தருவதாக உறுதி கூறினர். இறந்த பசுமாடு நிறைமாத கர்ப்பிணியாகவும் இருந்தது. இதன் மாட்டின் மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய் என சுந்தரம்மாள் தெரிவித்தார்.