/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடிந்து விழும் நிலையில் கால்நடை மருத்துவமனை
/
இடிந்து விழும் நிலையில் கால்நடை மருத்துவமனை
ADDED : ஜன 16, 2024 11:37 PM
திருவள்ளூ இடிந்து விழும் நிலையில் உள்ள முன்னாள் முதல்வர் அண்ணாதுரை திறந்து வைத்த கால்நடை மருத்துவமனையை சீரமைக்க, கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டருக்கு, கடம்பத்துார் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில், கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த, 1967ல், அப்போது முதல்வராக இருந்த அண்ணாதுரை இந்த கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்தார்.
இந்த கால்நடை மருத்துவமனைக்கு, கடம்பத்துார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர், இங்கு வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
தற்போது, 57 ஆண்டுகள் கடந்த இந்த மருத்துவமனை கட்டடம் முறையான பராமரிப்பின்றி, சேதமடைந்து காட்சியளிக்கிறது. இடிந்து விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படுவதற்குள், இந்த மருத்துவமனையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

