/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி-யில் இருந்து திருவாலங்காடு நேரடி பஸ் தேவை
/
திருத்தணி-யில் இருந்து திருவாலங்காடு நேரடி பஸ் தேவை
திருத்தணி-யில் இருந்து திருவாலங்காடு நேரடி பஸ் தேவை
திருத்தணி-யில் இருந்து திருவாலங்காடு நேரடி பஸ் தேவை
ADDED : ஜன 05, 2025 08:06 PM
திருத்தணி:திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து, திருவாலங்காடு பகுதிக்கு நேரடி அரசு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. திருவாலங்காட்டில் வடாரண்யேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலாகும்.
இக்கோவிலுக்கு, திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று சிவபெருமானை தரிசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு நேரடி பேருந்து வசதி இல்லாததால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களுக்கு சென்று தான் திருவாலங்காட்டிற்கு செல்ல வேண்டியுள்ளது.
இதுதவிர, திருவாலங்காடு அரசு அலுவலகங்கள் மற்றும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள், திருத்தணியில் இருந்து, தினமும் சென்று வருகின்றனர்.
இவர்களும், கடும் சிரமப்படுகின்றனர். மேலும், 15க்கும் மேற்பட்ட ஊராட்சியினர் தங்களது குறைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்து மக்கள் திருவாலங்காடு ஒன்றிய அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.
எனவே, திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, திருவாலங்காட்டிற்கு நேரடி பேருந்து வசதி இயக்க வேண்டும் என, பயணியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.