/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுக்கூடமாக மாறி வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
/
மதுக்கூடமாக மாறி வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
மதுக்கூடமாக மாறி வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
மதுக்கூடமாக மாறி வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
ADDED : ஜன 31, 2024 11:22 PM
கடம்பத்துார்:தண்டலம் - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டஞ்சேரி ஊராட்சி.
இப்பகுதியில் நெடுஞ்சாலையோரம் ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக, கடந்த 2018 - 19ம் ஆண்டு 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2,000 லிட்டர் கொள்ளளவு உடைய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது.
இந்த குடிநீர் நிலையம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. வயல்களுக்கு அருகில் அமைக்கப்பட்டதால், பகுதிவாசிகள் பயன்படுத்த முடியவில்லை. இதனால், சுத்திகரிப்பு நிலையம் வீணாகி வருவதோடு, மது அருந்தும் இடமாக மாறியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொண்டஞ்சேரி ஊராட்சியில் ஆய்வு செய்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பகுதிவாசிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.