ADDED : மே 02, 2025 02:17 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து நெடியம் வழியாக பாயும் கொசஸ்தலை ஆறு, பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது.
நெடியம் மற்றும் சொரக்காய்பேட்டை இடையே கொசஸ்தலையின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. 200 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள இந்த தரை பாலம் இடிந்து விழுந்து வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்த பாலத்தால், போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
அதன் பின் மண் கொட்டியும், கான்கிரீட் கலவை கொண்டும் சமன் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த பாலம், போக்குவரத்துக்கு தகுதி இல்லாத நிலை நீடிக்கிறது. இந்த பாலம் தற்போது நெற் களமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பாலத்தை தரமாக கட்டி முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
