/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பனை ஓலையில் கைவினை பொருள் மகளிர் குழுவினர் தயாரித்து அசத்தல்
/
பனை ஓலையில் கைவினை பொருள் மகளிர் குழுவினர் தயாரித்து அசத்தல்
பனை ஓலையில் கைவினை பொருள் மகளிர் குழுவினர் தயாரித்து அசத்தல்
பனை ஓலையில் கைவினை பொருள் மகளிர் குழுவினர் தயாரித்து அசத்தல்
ADDED : நவ 22, 2025 02:13 AM

திருவள்ளூர்: பழவேற்காடு மீனவ குப்பத்தைச் சேர்ந்த மகளிர் குழுவினர், பனை ஓலையில், குழந்தைகள் முதல் பெண்களுக்கு தேவையான கைவினை பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில், ஏராளமான மீனவ குப்பங்கள் உள்ளன. மீன்பிடி தொழில் அதிகம் உள்ள இப்பகுதியில், சமீபகாலமாக மகளிர் குழுவினர், பனை ஓலையில் பல்வேறு கைவினை பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, பழவேற்காடைச் சேர்ந்த பாத்திமா கூறியதாவது:
பழவேற்காடு மீனவ குப்பத்தில், மகளிர் குழுவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பனை ஓலையில், பல்வேறு அத்தியாவசிய, அலங்கார மற்றும் குழந்தைகள் விளையாட்டு பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். எங்களது குடும்பமே, பாரம்பரியமாக பனை ஓலை பொருட்களை பயன்படுத்தி, கூடை உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வருகிறது.
இதற்காக, நான் பிரத்யேக பயிற்சி எடுத்து, தற்போது பனை ஓலையில், காய்கறி, பூ உள்ளிட்ட பல்வேறு கூடை வகைகள், குழந்தைகளுக்கான பென்சில் பாக்ஸ், கிளி, மீன், நட்சத்திரம், பெண்கள் அணியும் கம்மல், வளையல் உள்ளிட்ட பொருட்களை செய்து வருகிறேன்.
மேலும், சீமந்தம், திருமண உள்ளிட்ட விழாக்களுக்கு தேவையான 'கிப்ட் பாக்ஸ்' தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.
மேலும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும், மகளிர் குழுவினர் நடத்தும் கண்காட்சியிலும் பங்கேற்று வருகிறோம். பல்வேறு கடைகளில் ஆர்டர் பெற்று, பனை ஓலை பொருட்களை விற்பனை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

