/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தர்பூசணி பழம் விற்பனையில் தகராறு ஒருவர் கைது
/
தர்பூசணி பழம் விற்பனையில் தகராறு ஒருவர் கைது
ADDED : பிப் 15, 2025 08:02 PM
பேரம்பாக்கம்:கடம்பத்துார் ஊராட்சி, கசவநல்லாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி, 41; நேற்று முன்தினம் இரவு; மனைவி செல்வி, 27, மற்றும் மகன், மகளுடன் பேரம்பாக்கத்தில் நடந்த வாரச்சந்தையில் சரக்கு வாகனத்தில் தர்பூசணி பழம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பேரம்பாக்கம் புதுகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரபு, 32, என்பவர், நண்பர்களுடன் பழம் வாங்க வந்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இதுகுறித்து பிரபு மற்றும் செல்வி தனித்தனியாக அளித்த புகாரின்படி மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து, முனியாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பிரபுவை தேடி வருவதாக மப்பேடு போலீசார் தெரிவித்தனர்.

