/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதருக்குள் மாயமான மண்புழு உரக்கொட்டகை
/
புதருக்குள் மாயமான மண்புழு உரக்கொட்டகை
ADDED : ஜன 08, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது அதிகத்துார் ஊராட்சி.
இங்குள்ள கூவம் ஆறு அருகே, மட்கும் குப்பையிலிருந்து, மண்புழு உரம் தயாரிக்க, 2017- -- 18ல் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ், 1 லட்சம் ரூபாய் மதிப்பில், மண்புழு உரக் கொட்டகை அமைக்கப்பட்டது.
மண்புழு உரம் தயாரிக்கஅமைக்கப்பட்ட உரக் கொட்டகை அமைக்கப்பட்டு பயன் பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்து புதர் சூழ்ந்து வீணாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்புழு உரக்கொட்டகையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேணடுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.