/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு வலை
/
பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு வலை
ADDED : ஜன 07, 2025 08:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் காலனியைச் சேர்ந்தவர் பூங்கொடி, 54. நேற்று முன்தினம் இவர், சென்னங்காரணி கிராமத்தில் உள்ள தன் மகள் வீட்டிற்கு சென்றார். இரவில் பூங்கொடி மறைவான இடத்திற்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
அப்போது, அதே கிராமத்தைசேர்ந்த ஒருவர் பலாத்காரம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள், ரத்த காயத்துடன் இருந்த பூங்கொடியை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

