/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பை கழிவு நிறைந்த பயணியர் நிழற்குடை
/
குப்பை கழிவு நிறைந்த பயணியர் நிழற்குடை
ADDED : ஜூலை 21, 2025 11:51 PM

ஊத்துக்கோட்டை, அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள பேருந்து நிறுத்தம், குப்பை நிறைந்து காணப்படுவதால், மாணவர்கள் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் ஊராட்சி, மதுரவாசல் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் பக்தர்கள், அரசு பேருந்துகள் வாயிலாக பள்ளிக்கு செல்கின்றனர்.
பள்ளி முடிந்து மாணவர்கள் பேருந்திற்கு காத்திருக்கும் போது, அவர்களின் வசதிக்காக அங்கு பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.
தற்போது, முறையான பராமரிப்பு இல்லாததால், அங்கு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை கிழித்து, நிழற்குடை முழுதும் போடப்பட்டுள்ளது.
மேலும், அமரும் இடங்கள் சேதம் அடைந்துள்ளன. எனவே, எல்லாபுரம் ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பயணியர் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

