/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
1.2 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது
/
1.2 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது
ADDED : மார் 17, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
பெரியபாளையம் மதுவிலக்கு போலீசார், ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து சென்றவரை போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர் ஆந்திர மாநிலம், நெல்லுார் எட்டிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த மண்டலபிரசாத், 29 என்பதும் 1.2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

