தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாசு அடைந்து நிறம் மாறிய நீரோடை

மாசு அடைந்து நிறம் மாறிய நீரோடை

மாசு அடைந்து நிறம் மாறிய நீரோடை


ADDED : ஆக 13, 2025 02:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2025 02:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: தொழிற்சாலைகளின் கழிவுநீர் திறந்துவிடப்படுவதால், நாகராஜகண்டிகை நீரோடை மாசு அடைந்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி - மாதர்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், நாகராஜகண்டிகை கிராம எல்லையில், ஏரிகளுக்கான நீரோடை செல்கிறது. கால்நடை பயன்பாட்டில் அந்த நீரேடை, தற்போது நிறம் மாறி மாசடைந்து வருகிறது.

நீரோடையின் கரைகள் ஓரம் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதன் கழிவுநீர் அந்த நீரோடையில் திறந்துவிடப்படுவதால் தண்ணீர் மாசடைந்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர், நீரோடை தண்ணீரை ஆய்வு கூட பரிசோதனைக்கு அனுப்பி, உரிய கள ஆய்வு மேற்கொண்டு, விதிகள் மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்தடுத்த நீர்நிலைகள் மாசு அடையாமல் பாதுகாக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us