ADDED : பிப் 07, 2026 06:33 AM

அ நிறம் | அளவு
சோழவரம்:ஆங்காடு கிராமத்தில், குப்பை கழிவுகளால் குளம் பாழாகி வருவதாக பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சோழவரம் ஒன்றியம், ஆங்காடு கிராமத்தில், இரண்டு ஏக்கர் பரப்பு கொண்ட ஊர்பொதுக்குளம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இந்த குளம் முழுதும் பாசிபடிந்தும், குப்பை கழிவுகள் குவிந்தும் கிடக்கிறது. தேங்கியுள்ள தண்ணீரும், கழிவுகளால் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இது கிராமவாசிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
சோழவரம் ஒன்றிய நிர்வாகம் மேற்க்கண்ட குளத்தை துார்வாரி சீரமைக்கவும், குப்பை, கழிவுகளை கொட்டி எரிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
