/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடுப்பின்றி பாசி படர்ந்துள்ள குளம்
/
தடுப்பின்றி பாசி படர்ந்துள்ள குளம்
ADDED : ஜன 05, 2025 11:03 PM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து, சோளிங்கர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது சின்ன நாகபூண்டி. இங்கிருந்து, பெரிய நாகபூண்டிக்கு இணைப்பு சாலை போடப்பட்டுள்ளது.
இந்த மார்க்கத்தில், நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் ஊராட்சி குளம் ஒன்று வெட்டப்பட்டுள்ளது. குளத்திற்கு அருகே ஓடை பாய்கிறது. ஓடையின் நீர்வரத்தால், குளம் ஆண்டு முழுதும் நீர் நிரம்பியே காணப்படும். நுாறு நாள் வேலை திட்டத்திற்கு இந்த குளம் சிறந்த உதாரணமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த பருவ மழையால் குளம் முற்றிலுமாக நிரம்பி, சாலை மட்டத்திற்கு இணையாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
குளத்தில், பாசி வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த குளம், தற்போது சாலையோர புல்வெளி போல காணப்படுகிறது.
குளத்திற்கு தடுப்பு சுவர் கட்டப்படாத நிலையில், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. குளத்திற்கு வேலி அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.