/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்புளியில் மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்ட பள்ளம்
/
கும்புளியில் மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்ட பள்ளம்
கும்புளியில் மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்ட பள்ளம்
கும்புளியில் மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்ட பள்ளம்
ADDED : டிச 04, 2024 01:31 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் சோதனைச்சாவடியில் இருந்து, கும்புளி, ஏடூர், வழியாக கண்ணம்பாக்கம் வரை செல்லும் சாலை, மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள பிற மாவட்ட சாலையாகும்.
சோதனைச்சாவடி அருகே ஏரிகளின் உபரி நீர் கால்வாய் அமைந்துள்ளது. கும்மிடிப்பூண்டி பகுதியில் பெய்த தொடர் மழையால், கால்வாயில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அப்போது, மேற்கண்ட கும்புளி சாலையை ஒட்டி மழை வெள்ளம் பாய்ந்ததால், சாலையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. சாலை அரிப்பை எச்சரிக்கும் வகையில், தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து வருகின்றனர். உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு சாலை அரிப்பை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.