/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அங்கன்வாடியில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு
/
அங்கன்வாடியில் புகுந்த கட்டுவிரியன் பாம்பு
ADDED : ஜன 29, 2026 06:59 AM

திருவாலங்காடு: அங்கன்வாடி மையத்தில் புகுந்த கட்டுவிரியன் பாம்பை, கிராம மக்கள் அடித்து பிடித்தனர். அதிகாரிகளின் அலட்சியமே பாம்பு வர காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் ஊராட்சி கணேசபுரம் கிராமத்தில், அரசு துவக்கப் பள்ளி அருகே அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
நேற்று மதியம் கட்டுவிரியன் பாம்பு அங்கன்வாடி மையத்தில் புகுந்தது. குழந்தைகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அங்கன்வாடியில் பாம்பு புகுந்ததை அறிந்த அப்பகுதி மக்கள், பாம்பை உருட்டு கட்டையால் தாக்கியதில் உயிரிழந்தது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
அங்கன்வாடி மையம் அருகே கொட்டப்பட்ட கட்டட கழிவு, செடி, கொடிகளில் பாம்புகள் வசிக்கின்றன. அதை அகற்ற வேண்டும். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தோம்.
திருவாலங்காடு ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

