/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காக்களூர் தொழிற்பேட்டையில் வழிப்பறி போலீஸ் பாதுகாப்பு கேட்டு கோரிக்கை
/
காக்களூர் தொழிற்பேட்டையில் வழிப்பறி போலீஸ் பாதுகாப்பு கேட்டு கோரிக்கை
காக்களூர் தொழிற்பேட்டையில் வழிப்பறி போலீஸ் பாதுகாப்பு கேட்டு கோரிக்கை
காக்களூர் தொழிற்பேட்டையில் வழிப்பறி போலீஸ் பாதுகாப்பு கேட்டு கோரிக்கை
ADDED : ஏப் 28, 2025 11:31 PM
காக்களூர்,காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை தொழிலாளர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவம் நடப்பதை தடுக்க, போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என, தொழிற்சாலை நிர்வாகங்கள், எஸ்.பி.,க்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் ஒன்றியம் காக்களூரில் சிட்கோ தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. காக்களூர், புட்லுார் மற்றும் தண்ணீர்குளம் ஆகிய ஊராட்சி எல்லையில், அமைந்துள்ள தொழிற்பேட்டையில், 329 ஏக்கர் பரப்பளவில், சிறு, குறு மற்றும் பெரியவை என, 360 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இங்கு, 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இதில், 40 சதவீதம் பெண்கள். இத்தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வீடு திரும்பும் தொழிலாளர்களை, சிலர் மறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, பணம், நகை உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்து வருகின்றனர். குறிப்பாக, சம்பளம் வழங்கும் தினத்தை குறிவைத்து, தொழிலாளர்களை மிரட்டி பணத்தைக் கொள்ளையடித்து செல்கின்றனர்.
இதனால், தினமும் இரவு நேரத்தில், தொழிலாளர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.
எனவே, காக்களூர் தொழிற்பேட்டைக்கு பிரத்யேகமாக போலீஸ் பாதுகாப்பு மற்றும் ரோந்து போலீசார் நியமிக்க தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் நிர்வாகம் திருவள்ளூர் எஸ்.பி.,க்கு வேண்டுகோள் விடுத்து மனு அளித்துள்ளனர்.

