/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் குழாய் கொண்டு செல்வதற்கு ஆற்றின் குறுக்கே சிறுபாலம் அமைப்பு
/
குடிநீர் குழாய் கொண்டு செல்வதற்கு ஆற்றின் குறுக்கே சிறுபாலம் அமைப்பு
குடிநீர் குழாய் கொண்டு செல்வதற்கு ஆற்றின் குறுக்கே சிறுபாலம் அமைப்பு
குடிநீர் குழாய் கொண்டு செல்வதற்கு ஆற்றின் குறுக்கே சிறுபாலம் அமைப்பு
ADDED : மார் 17, 2024 11:07 PM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த சின்னகாவணம், மெதுார் ஆகிய கிராமங்களில் இருந்து பழவேற்காடு மீனவப்பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக ராட்சத குழாய்கள், ஆங்காங்கே கீழ்நிலை தொட்டிகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் அமைத்து, பழவேற்காடு பகுதியில் உள்ள, மீனவ கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
குடிநீர் செல்லும் இரும்பு குழாய்கள், போலாச்சியம்மன்குளம், ஆண்டார்மடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கால்வாய் மற்றும் ஆரணி ஆற்றின் குறுக்கே கொண்டு செல்லப்படுகின்றன.
ஆறு மற்றும் கால்வாய்களில் தேங்கும் உவர்ப்பு நீரில், இரும்பு குழாய்கள் நீண்டகாலம் மூழ்கி கிடப்பதால், அவை துருப்பிடித்து சேதம் அடைகின்றன. இதனால் அவற்றில் குடிநீர் கசிந்து வீணாகிறது. தண்ணீரில் மூழ்கி கிடக்கும்போது கசிவுகளை கண்டறிவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
குடிநீர் குழாய்கள் வீணாவதை தடுக்கும் வகையில், ஆறு மற்றும் கால்வாய் உள்ள பகுதிகளில் சிறுபாலம் அமைக்கப்படுகிறது. அதன் மீது இரும்பு குழாய்கள் பொருத்தி குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கான கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆறு மற்றும் கால்வாய்களில் பில்லர்கள் அமைத்து அதன் மீது கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது.
இதன் வாயிலாக மழைக்காலங்களிலும் குழாய்களில் ஏற்படும் குடிநீர் கசிவுகளை கண்காணிக்கவும், அவை துருப்பிடித்து வீணாவதை தடுக்கவும் முடியும் என, கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

