ADDED : அக் 01, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் தொழுவூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் மகள் சாய்ஸ்ரீ, 20.
சென்னை வள்ளியம்மாள் கல்லுாரியில் பி.காம்., மூன்றாமாண்டு படித்து வந்த இவர், நேற்று காலை, கல்லுாரி செல்வதற்காக செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது கடவுப்பாதையை மொபைல் போனில் பேசிக் கொண்டே கடந்தபோது, சென்னை நோக்கி சென்ற காவிரி விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் ரயில்வே போலீசார் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.