ADDED : செப் 20, 2024 08:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியநத்தம் கிராமத்தில் வசித்தவர் அரசு, 19. பெட்ரோல் பங்க் ஊழியர். நேற்று முன்தினம் இரவு, நாகராஜகண்டிகை கிராமத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி, டூ-வீலரில் சென்றுக்கொண்டிருந்தார்.
காயலார்மேடு கிராமம் அருகே எதிரே வந்த சிமென்ட் கலவை லாரி மோதியதில், அதே இடத்தில் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.