/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அணைக்கட்டில் மூழ்கி வாலிபர் பலி
/
அணைக்கட்டில் மூழ்கி வாலிபர் பலி
ADDED : ஜன 30, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை : தாமரைப்பாக்கம் அருகே, அம்மனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மகள் அருள்ராஜ், 23. கடந்த, 26ம் தேதி மாலை, 4:00 மணிக்கு அங்குள்ள தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் உள்ள நீரில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது அவர் நீரில் மூழ்கினார். உடன் சென்றவர்களின் கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்தினர், திருவள்ளூர், தேர்வாய் சிப்காட் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய அருள்ராஜை தீவிரமாக தேடினர். கிடைக்கவில்லை. நேற்றுமீண்டும் தேடிய நிலையில், பிணமாக மிதந்த அருள்ராஜின் உடலைமீட்டனர்.