/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயணிகளுக்கு பயனில்லாத நிழற்குடை
/
பயணிகளுக்கு பயனில்லாத நிழற்குடை
ADDED : மே 31, 2024 02:56 PM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்கிறது அப்பல்ராஜி கண்டிகை மற்றும் சாமிநாயுடு கண்டிகை கிராமம். இந்த கூட்டு சாலையில், பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அப்பல்ராஜிகண்டிகை வழியாக வங்கனுார், ஜி.சி.எஸ்.கண்டிகை, இ.எம்.ஆர்.கண்டிகை என 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த நிழற்குடையில் இருந்து பேருந்து பயணம் மேற்கொள்கின்றனர்.
இங்கிருந்து பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிழற்குடை பராமரிப்பு இல்லாததால், தற்போது பாழைடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. நிழற்குடையில் மதுபிரியர்கள் மதுஅருந்துகின்றனர். இதனால், பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நிழற்குடையை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.