ADDED : மார் 14, 2024 09:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர், ரமேஷ், 34. கட்டட மேஸ்திரி . இவருக்கு சூரி,30, என்ற மனைவியும், கவிஸ்ரீ,9 , பிரபாஸ்ரீ,7 என்ற இரு மகள்கள் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் ரமேஷூக்கு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று ரமேஷ் மது குடித்துவிட்டு போதையில், அங்குள்ள விவசாய கிணற்றின் மீது உட்கார்ந்து இருந்தார்.
போதை அதிகமானதும் ரமேஷ் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார், விசாரித்து வருகின்றனர்.

