ADDED : பிப் 07, 2026 06:24 AM
அ நிறம் | அளவு
திருத்தணி: வீட்டின் வாசற்படியில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருத்தணி அடுத்த எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 29. இவர் நேற்று முன்தினம் இரவு உறவினரின் சுபநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின் நள்ளிரவில், வீட்டு வாசற்படியில் இறங்கி தெருவிற்கு சென்ற போது, கால் இடறி, வெங்கடேஷ் மழைநீர் வடிகால்வாயில் விழுந்தார்.
இதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தோர், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.
