/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறுக்கே வந்த எருமைகளால் வாலிபர் மீது லாரி ஏறி உயிரிழப்பு
/
குறுக்கே வந்த எருமைகளால் வாலிபர் மீது லாரி ஏறி உயிரிழப்பு
குறுக்கே வந்த எருமைகளால் வாலிபர் மீது லாரி ஏறி உயிரிழப்பு
குறுக்கே வந்த எருமைகளால் வாலிபர் மீது லாரி ஏறி உயிரிழப்பு
ADDED : அக் 15, 2025 11:11 PM
மதுரவாயல்: மதுரவாயல் பை - பாஸ் சாலையின் குறுக்கே வந்த எருமைகளால் விபத்தில் சிக்கிய வாலிபர், கன்டெய்னர் லாரி ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாங்காடு, கஜலட்சுமி நகரைச் சேர்ந்தவர் முகமது சித்திக் உசேன், 33. இவர், அம்பத்துாரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிகிறார்.
இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடிந்து, தன் 'யமஹா' பைக்கில் வீட்டிற்கு சென்றார். போரூர் நோக்கி, தாம்பரம் - - மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்றார்.
அப்போது, சாலையின் குறுக்கே திடீரென எருமைகள் கூட்டமாக வந்துள்ளன. அவற்றை கண்டு 'பிரேக்' அடித்துள்ளார். அப்போது, நிலைத்தடுமாறி பைக்குடன் கீழே விழுந்துள்ளார்.
அதேநேரம், பின்னால் வந்த கன்டெய்னர் லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, கன்டெய்னர் லாரி மற்றும் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.