/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு போக்சே
/
சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு போக்சே
ADDED : நவ 02, 2024 08:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் காவல் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 29ம் தேதி காலை, சிறுமி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருத்தணி தாலுகா சிவாடா கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார், 28, என்பவர் வழிமறித்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் உதயகுமாரை கைது செய்தனர்.