/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆவடி மீன் மார்க்கெட் சீரமைப்பு பணி
/
ஆவடி மீன் மார்க்கெட் சீரமைப்பு பணி
ADDED : நவ 11, 2024 01:52 AM

ஆவடி:ஆவடி மாநகராட்சி, புதிய ராணுவ சாலையில், 20 கடைகளுடன் ஆவடி மீன் சந்தை இயங்கி வருகிறது.
இங்கு, ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காமராஜர் நகர், காந்தி நகர், திருமுல்லைவாயில், தமிழ்நாடு காவலர் குடியிருப்பு, சேக்காடு, ஜே.பி.எஸ்டேட், வசந்தம் நகர், மூர்த்தி நகர், கோவர்த்தனகிரி நகர், பருத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தினமும் 1,000க்கும் மேற்பட்ட அசைவ பிரியர்கள் மீன்கள் வாங்கி செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, மீன் சந்தை பகுதியில், தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் வந்து செல்ல சிரமப்படுகின்றனர். தொடர் புகாரை அடுத்து, அமைச்சர் நாசர், நேற்று காலை சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின், மழை நீர் தேங்காமல் இருக்க, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், தரையை உயர்த்தி சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, ஆவடி மேயர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.