/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தலைமறைவு குற்றவாளி விமான நிலையத்தில் கைது
/
தலைமறைவு குற்றவாளி விமான நிலையத்தில் கைது
ADDED : பிப் 22, 2024 01:07 AM

சென்னை:சென்னையில் இருந்து அபுதாபி வழியாக பஹ்ரைன் செல்லும், 'எட்டியார்ட் ஏர்லைன்ஸ்' விமானத்தில் பயணிக்க வந்த, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரவி சிங், 31, என்பவரின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் நேற்று பரிசோதித்தனர்.
இவர், பஞ்சாப் மாநில போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிந்தது.
பஞ்சாப் மாநில காவல் நிலையத்தில், ஆறு ஆண்டுகளுக்கு முன் பதிவான, குற்ற வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இவரை குறிப்பிட்டு, அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த ரவி சிங்கை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் நேற்று பிடித்து, சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், பஞ்சாப் போலீசாரிடம் ரவிசிங்கை ஒப்படைக்க உள்ளனர்.