/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூரில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து
/
மீஞ்சூரில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து
ADDED : டிச 31, 2024 01:24 AM

மீஞ்சூர், சென்னை, தண்டையார்பேட்டையில் இருந்து, மீஞ்சூர் அடுத்த, தேவ தானம் கிராமத்தில் உள்ள நிலத்தடி கருப்பண்ணசாமி கோவிலுக்கு இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் நேற்று ஷேர் ஆட்டோ ஒன்றில் பயணித்தனர்.
ஆட்டோ, மீஞ்சூர் பஜார்
பகுதியை கடக்கும் போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் தலைகுப்புற கவிழ்ந்தது.
பின்னால் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அங்கிருந்தவர்கள் உடனடியாக கவிழ்ந்த ஆட்டோவில் இருந்தவர்களை பாதுகாப்பாகமீட்டனர்.
சிறு காயங்களுடன் அவர்கள் மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விசாரித்தவருகின்றனர்.